புதன், மார்ச் 07, 2018

வட்டுக்கோட்டையில் சிக்கியது 75 கிலோ கஞ்சா! - இருவர் கைது

75 கிலோ கேரள கஞ்சாவை கடத்த முற்பட்ட இருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பண்ணாகம்- சுழிபுரம் வீதியில் இன்று அதிகாலை இருவர் செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து 75 கிலோ கேரள கஞ்சாவையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த 55 மற்றும் 52 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 32 சிறிய பொதிகளில் அடைக்கப்பட்டு இந்த கஞ்சா கடத்திச்செல்லப்பட்டிருந்தது. குறித்த கஞ்சாவினை விற்பனை செய்யும் நோக்கில் வேறு பகுதிக்கு கொண்டு செல்ல முற்பட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் முதற்கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளனர். அத்துடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட இருவரையும் யாழ் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.