தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வியாழன், மார்ச் 01, 2018

தமிழரசுக் கட்சியை நாடுகிறது தாமரை மொட்டு!

திருகோணமலை- மொரவெவ பிரதேச சபையில் ஆட்சியமைக்க தமிழரசுக் கட்சியின் உதவியை நாட பொதுஜன
பெரமுன தீர்மானித்துள்ளது. மொரவெவ பிரதேச சபைக்கான தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி ஏழு ஆசனங்களை வென்று ஆட்சியமைக்கத் தகுதி பெற்றுள்ளது. அதே ​நேரம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் நான்கு பேரும், ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் மூன்று பேரும் தெரிவாகியுள்ளனர். அதே ​போன்று தமிழரசுக் கட்சி சார்பிலும் ஒருவர் தெரிவாகியுள்ளார்.
திருகோணமலை- மொரவெவ பிரதேச சபையில் ஆட்சியமைக்க தமிழரசுக் கட்சியின் உதவியை நாட பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. மொரவெவ பிரதேச சபைக்கான தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி ஏழு ஆசனங்களை வென்று ஆட்சியமைக்கத் தகுதி பெற்றுள்ளது. அதே ​நேரம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் நான்கு பேரும், ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் மூன்று பேரும் தெரிவாகியுள்ளனர். அதே ​போன்று தமிழரசுக் கட்சி சார்பிலும் ஒருவர் தெரிவாகியுள்ளார்.

இந்நிலையில் தமிழரசுக் கட்சியின் ஆதரவுடன் மொரவெவ பிரதேச சபையில் ஆட்சியமைக்க மஹிந்த அணி முயற்சிக்கின்றது. எனினும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து தாம் ஆட்சியமைக்கவுள்ளதாகவும் தலைவர் பதவியை இரண்டு வருடங்கள் வீதம் பகிர்ந்து கொள்ளவுள்ளதாகவும் ஐ.தே.க.வேட்பாளர் குழுத்தலைவர் சாலிய ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.