ஞாயிறு, மார்ச் 18, 2018

வேலணை பிரதேச சபை தவிசாளர் திரு .நாவலன் கருணாகரனின்முன்மாதிரி செயல்

வேலணை பிரதேச சபை தவிசாளராக தெரிவாகி இருக்கும் கூட்டமைப்பின் உறுப்பினர்  திரு
நாவலன் கருணாகரன் அவர்கள் ஒரு முன்மாதிரியான  அறிவிப்பை வெளியிட்டுள்ளார்  .எதிர்வரும் 29 ஆம் திகதிவேலணை பிரதேச சபை தவிசாளராக  பதவி ஏற்க விருக்கும் இவர்  தான் பெறப்போகும் மாதாந்த ஊதியமான 25000ரூபாவினை   அந்த பிரதேச சபை அடங்கலான பொதுப்பணி , சமூகப்பணிகளுக்காக ( கடற்தொழிலாளர் சங்கங்கள் , முன்பள்ளிகள் , சனசமூக நிலையங்கள் , விளையாட்டு கழகங்கள் , வறுமைக்கோட்பாட்டுக்குட்பட்ட குடும்பங்கள் , சிரமதானப்பணிகள் ) வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார் சமூக சேவையி ல் ஈடுபாடு உள்ளோருக்கு இது ஒரு முன்மாதிரியான செயலாக  விளங்கும் என பொது மக்கள் பாராட்டி உள்ளனர்