புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

செவ்வாய், மார்ச் 13, 2018

வேலைப்பளு காரணமாகவே ஜெனிவாவுக்குச் செல்லவில்லை-முதலமைச்சர் பேரவையை பகிஸ்கரித்த கஜனுக்கு பழிவாங்கலா

வேலைப்பளு காரணமாகவே தாம் ஜெனிவாவுக்குச் செல்லவில்லை, என்று தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன்.

கிளிநொச்சி ஊருத்திரபுரம் சிவநகர் பகுதியில் மூத்தோர் சங்க கட்டடத்தினை வடமாகாண முதலமைச்சர் திறந்து வைத்தார். அதன் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம் ஆகியோர் ஜெனிவாவுக்குச் சென்றுள்ளனர். வேறு யார் யார் செல்கின்றார்கள் என்று எனக்கு தெரியவில்லை. நான் அங்கு செல்லாவிடினும், அனைத்து விடயங்களையும் எங்களுடைய பிரதிநிதிகள் அங்கு எடுத்துரைப்பார்கள் எனத் தெரிவித்தார்.