செவ்வாய், மார்ச் 13, 2018

சிறிலங்கா மீதான கண்காணிப்பு தொடரும் – கூட்டமைப்பிடம் உறுதியளித்த ஐ.நா அதிகாரி

சிறிலங்கா மீதான ஐ.நாவின் நெருங்கிய கண்காணிப்பும், ஈடுபாடும்  தொடரும் என்று  அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின்
உதவிச்  செயலர் ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்ட குழுவினரை  சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களின் பின்னரான அரசியல் நிலவரம் குறித்து இந்தச் சந்திப்பின் போது, ஐ.நா உதவி செயலாளருக்கு இரா.சம்பந்தன் எடுத்துக் கூறியுள்ளார்.
TNA-jeffry feltman (1)
அத்துடன், ”சிறிலங்கா அரசாங்கம் 2015இல் பெற்றுக்கொண்ட