புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மார்., 2018

நீண்ட இழுபறிகளுக்குப் பின்னர் காணா­மற்­போ­னோர் பணி­ய­க உறுப்பினர்களுக்கு அனுமதி அளித்தார் ஜனாதிபதி

ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் கூட்­டத்தொடர் நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கும் நிலை­யில், காணா­மற்­போ­னோர் பணி­ய­கத்­துக்­கான ஆணை­யா­ளர் மற்­றும் உறுப்­பி­னர்­க­ளுக்­கான நிய­ம­னங்­கள் ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வால் நேற்று வழங்­கப்­பட்­டுள்­ளது. காணா­மற்­போ­னோர் பணி­ய­கத்தை உரு­வாக்­கும் சட்­ட­வ­ரைவு நாடா­ளு­மன்­றத்­தில் சமர்­பிக்­கப்­பட்டு 19 மாதங்­க­ளின் பின்­னர் அந்­தப் பணி­ய­கத்­துக்­கான ஆணை­யா­ளர் மற்­றும் உறுப்­பி­னர்­க­ளுக்கு அரச தலை­வர் மைத்­தி­ரி­பா­ல­வால் நிய­ம­னக் கடி­தம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வின் உறுப்­பி­ன­ரான சாலிய பீரிஸ் ஆணைக்­கு­ழு­வின் தலை­வ­ரா­க­வும், லிய­னகே, நிமல்கா பெர்­னாண்டோ, பாது­காப்­புத் தரப்­பின் சார்­பில் வான் படை­யின் சட்­ட­ஆ­லோ­ச­க­ரா­கச் செயற்­ப­டும் மொகான் பி பீரிஸ், மட்­டக்­க­ளப்­பைச் சேர்ந்த ஜய­தீபா, ரகீம் முல்­லைத்­தீ­வைச் சேர்ந்த வேந்­தன் ஆகி­யோர் அர­ச­மைப்­புச் சபை­யி­னால் பரிந்­து­ரைக்­கப்­பட்­டி­ருந்­த­னர்.

இவர்­கள் ஏழு ­பே­ருக்­கும், ஜனாதிபதி செய­ல­கத்­தில் நேற்று நிய­ம­னம் வழங்­கப்­பட்­டுள்­ளது. காணா­மற்­போ­னோர் பணி­ய­கத்தை உரு­வாக்­கும் சட்­ட­வ­ரைவு நாடா­ளு­மன்­றத்­தில் சமர்­ப்பிக்­கப்­பட்டு 11 மாதங்­க­ளின் பின்­னரே அதனை நடை­மு­றைப்­ப­டுத்­தும் வர்த்தமானியில் ஜனாதிபதி கையெ­ழுத்­திட்­டார்.

இதன் பின்­னர் பணி­ய­கத்­துக்­கான ஆணை­யா­ளர்­களை, அர­ச­மைப்­புச் சபை நேர்­மு­கத் தேர்­வின் ஊடா­கத் தெரிவு செய்­தி­ருந்­தது. அர­ச­மைப்­புச் சபை­யின் முதல் பரிந்­து­ரை­யில் ஜனாதிபதி சில திருத்­தங்­களை மேற்­கொண்­டி­ருந்­தார். பின்­னர் மீள­வும் அர­ச­மைப்­புச் சபை ஆணை­யா­ளர் மற்­றும் உறுப்­பி­னர்­க­ளைப் பரிந்­து­ரைத்­தி­ருந்­தது. அர­ச­மைப்­புச் சபை பரிந்­து­ரைத்து ஒன்­றரை மாதங்­க­ளின் பின்­னரே, ஜனாதிபதி மைத்­தி­ரி­பால நிய­ம­னம் வழங்­கி­யுள்­ளார்.

ad

ad