புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வெள்ளி, மார்ச் 02, 2018

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரை தாக்க முயற்சித்த ஆனந்த சங்கரி!

தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி தன்னை தாக்க முயற்சித்ததாக கூட்டணியின் தலைவர் பொன் சிவசுப்பிரமணியம் யாழ் பொலிஸ் நிலையத்தில் இன்று(02-03- 2018) முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.தமிழர் விடுதலைக் கூட்டணியின் கட்சிக் கூட்டம் இன்று காலை 9 மணிக்கு கட்சியின் செயலாளர் நாயகத்தின் தலைமையில் இடம்பெற்றுள்ளது. குறித்த கட்சியின் தலைவரான சிவசுப்பிரமணியம் அண்மையில் தான் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளார்.இருப்பினும் தன்னை கூட்டத்துக்கு அழைக்கவில்லை என தெரிவித்து கட்சி அலுவலகத்துக்கு இன்று சென்றுள்ளார்.அப்போது கூட்டத்தில் இருந்த கட்சியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி அவரை ஏன் இங்கு வந்தாய் என கேட்டு பேசியதுடன் தாக்குவதற்கும் முயற்சித்துள்ளார்.தான் இரு தினங்களில் வெளிநாடு செல்லவிருப்பதாகவும் மீண்டும் வந்து இச் சம்பவம் குறித்து வழக்கு தொடரவுள்ளதாகவும் தெரிவித்து யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.