புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 மார்., 2018

முதியவர்கள் கடத்தப்படுவதாக எழுந்த சர்ச்சை! தொண்டு நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் அருகே இறந்தவரின் உடலை ஆம்புலன்ஸில் எடுத்துச் சென்றபோது, ஆம்புலன்ஸில் இருந்த முதியவர்கள் கூச்சலிட்ட சம்பவம் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த தொண்டு நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

முதியவர்கள் கடத்தல், அதிகாரிகள் ஆய்வு


காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே பாலேஸ்வரம் கிராமத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் செயின்ட் ஜோசப் ஹாஸ்பைப் என்றும் முதியோர் கருணை இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டவர்கள், தெருக்களில் பிச்சை எடுப்பவர்கள் என 300க்கும் மேற்பட்டவர்கள் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று தொண்டு நிறுவனத்துக்குச் சொந்தமான ஆம்புலன்ஸ் வாகனத்தில் காய்கறிகளுடன் இரண்டு முதியவர்கள் மற்றும் இறந்த பெண்ணின் உடல் ஆகியவற்றை ஏற்றிச்சென்றனர். தாம்பரத்திலிருந்து புறப்பட்ட அந்த வாகனம் திருமுக்கூடல் வழியாகச் செல்லும் போது ஆம்புலன்சில் இருந்த முதியவர்கள் எங்களை காப்பாற்றுங்கள் எனக் கூச்சலிட்டனர். இதனால் பொதுமக்கள் அந்த வாகனத்தை சிறைபிடித்தனர். இதையடுத்து அந்த வாகனம் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. கருணை இல்லத்துக்கு எதிராக அப்பகுதி பொதுமக்கள் ஆர்பாட்டம் செய்தனர். காவல்துறையினர் முறையாக ஆய்வு செய்வோம் என உறுதியளித்ததன் காரணமாக போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்காமல் உடலை கொண்டு சென்றது, காய்கறிகளுடன் இறந்தவரின் உடலை கொண்டு சென்றது என இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து இன்று காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜீவ், உத்திரமேரூர் வட்டாட்சியர் அகிலாதேவி மற்றும் சமூக நலத்துறையினர் என சுமார் 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்து வருகின்றனர். அசம்பாவிதம் ஏதும் ஏற்படக் கூடாது என்பதற்காக காவல்துறையினர் அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அங்குள்ள முதியவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறதா, சரியான உணவுகள் வழங்கப்படுகின்றனவா, இறந்து விட்டால் அவர்களை எப்படி புதைக்கிறார்கள் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டுவருகின்றன. மேலும் கருணை இல்லத்தில் இருக்கும் முதியவர்கள் அனைவரிடமும் தனித்தனியாக அதிகாரிகள் விசாணை மேற்கொண்டு வருகிறார்கள். மனநலம் பாதிக்கப்படாதவர்களை வேறு இல்லத்திற்கு கொண்டு செல்ல ஆலோசித்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில் கருணை இல்லத்தை நிர்வகித்து வரும் தாமஸ் தலைமறைவாகி இருப்பதாக சொல்கிறார்கள்.

ad

ad