புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

திங்கள், மார்ச் 12, 2018

ராஜீவ் கொலையாளிகளை மன்னித்து விட்டோம்- ராகுல் அறிவிப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு

சிங்கப்பூர் சென்ற அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மாணவர்களுடனான உரையாடலின்போது ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்களை நானும், எனது தங்கை பிரியங்கா காந்தியும் முழுமையாக மன்னித்து விட்டோம் என்று கூறினார்.

இதுதொடர்பாக, ராகுல் கூறியதையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் இதுபற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை தானும், தனது சகோதரியும் முழுமையாக மன்னித்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருக்கும் மனிதநேயமிக்க கருத்தை பெரிதும் வரவேற்கிறேன்.

இதனை வரவேற்கும் அதேவேளையில், குற்றம் சுமத்தப்பட்டு 26 வருடத்திற்கும் மேலாக சிறையிலிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்டோரை காலந்தாழ்த்தாமல் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் அவசர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்