தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வெள்ளி, மார்ச் 09, 2018

காணாமல் ஆக்கப்படுவதை தடுக்கும் சட்டத்தின் மூலம் கடந்த கால குற்றங்களுக்கு தண்டனை விதிக்க முடியாது! - திலக் மாரப்பன

காணாமல் ஆக்கப்படுவதில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் சட்டத்தின் ஊடாக கடந்தகால குற்றச்செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட முடியாது என வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார். பலவந்தமாக காணாமல் போதல்களிலிருந்து அனைவரையும் பாதுகாக்கும் நோக்கில் நிறைவேற்றப்பட்ட சட்டம் தொடர்பில் விளக்கமளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பலவந்தமாக காணாமல் போதல்களிலிருந்து அனைவரையும் பாதுகாக்கும் சட்டத்தின் ஊடாக இலங்கையர்கள் வெளிநாட்டு நீதிமன்றங்களில் தண்டனை விதிக்கும் நடைமுறைகள் கிடையாது. மேலும், இந்த சட்டம் கடந்த கால குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை விதிக்கும் வகையிலானதல்ல. குற்றச் செயலில் ஈடுபட்டு நாட்டில் எங்கேனும் மறைந்திருந்தால் அவரை தண்டிக்கும் வகையில் இந்த சட்டத்தின் 8ம் சரத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சர்வதேச பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விடயங்களும் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டதாக கருதப்பட முடியாது. சட்டம் அமுல்படுத்தப்படுவதற்கு முன்னதாக இடம்பெற்ற விடயங்களுக்கு இந்த சட்டத்தின் ஊடாக தண்டனை விதிக்கப்பட முடியாது என திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்