திங்கள், மார்ச் 05, 2018

கண்டி சம்பவம் ; தெல்தெனியவில் சுமண ரத்ன தேரர் ஆர்ப்பாட்டம்

கண்டி, திகனயில் ஏற்பட்ட  அமைதியின்மையின்  போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி தெல்தெனிய பொலிஸ் நிலையத்திற்கு முன் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.


குறித்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி சுமண ரத்தின தேரர் தலைமையில் தெல்தெனிய பொலிஸ் நிலையம் முன் இடம்பெற்றது.
28471263_1970588646487160_62961160318152
இந்நிலையில் கண்டி, திகனயில் இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்த நபர் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி சுமண ரத்ன தேரரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.