தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

சனி, மார்ச் 03, 2018

ஜெயலலிதா மறைவின் பின் தமிழகத்தில் அரசியல் நாகாரீகம்

ஜெயலலிதா மறைவின் பின் தமிழகத்தில் அரசியல் நாகாரீகம் முளைக்கிறதா முதல்வரும் ஸ்டாலினும் ஒரே மேசையில்காவிரி விவகாரம்மு தல்வா் பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆலோசனை
காவிாி விவகாரம் தொடா்பாக முதல்வா் எடப்பாடி பழனிசாமி மற்றும் எதிா்க்கட்சித் தலைவா் ஸ்டாலின் மற்றும் அதிகாாிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனா்.

காவிாி தீா்ப்பு வெளியானதைத் தொடா்ந்து கடந்த 22ம் தேதி தமிழக அரசு சா்ாபில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காவிாி மேலாண்மை வாாியம் அமைப்பது உள்ளிட்ட 3 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் காவிாி விவகாரத்தில் தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிா்க்கட்சி சாா்பில் தி.மு.க. ஆதரவு அளிக்கும் என்று எதிா்க்கட்சி தலைவா் ஸ்டாலின் தொிவித்திருந்தாா்.

இந்நிலையில் முதல்வா் பழனிசாமி நேற்று மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசினாா். மேலும் காவிாி விவகாரம் தொடா்பாக ஆலோசனை மேற்கொள்ள இன்று நோில் சந்திக்க ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்திருந்தாா். அதனை ஏற்று எதிா்க்கட்சி தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறாா்.

வருகிற 7ம் தேதி கா்நாடகா அரசு சாா்பில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது முதல்வா், எதிா்க்கட்சி தலைவா் சந்திப்பு நடைபெற்று வருகிறது.