தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

செவ்வாய், மார்ச் 20, 2018

ஐதேகவில் பாரிய மாற்றங்கள்! - தலைமைப் பதவியை விட்டுக் கொடுக்க ரணில் தயார்

ஐக்கிய தேசியக் கட்சியில், இன்னும் இரண்டு வாரங்களுக்குள் பாரிய மாற்றங்கள் மேற்​கொள்ளப்படவுள்ளன
என அக்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சி மறுசீரமைப்பின் போது கட்சி நிர்வாகிகள் மட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்போது, கட்சியின் பொதுச் செயலாளராக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நியமிக்கப்படக்கூடுமென, தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியில், இன்னும் இரண்டு வாரங்களுக்குள் பாரிய மாற்றங்கள் மேற்​கொள்ளப்படவுள்ளன என அக்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சி மறுசீரமைப்பின் போது கட்சி நிர்வாகிகள் மட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்போது, கட்சியின் பொதுச் செயலாளராக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நியமிக்கப்படக்கூடுமென, தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே​வேளை, துணை பொதுச் செயலாளர்களாக புதிய முகங்கள் இரண்டை அறிமுகம் செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் மக்கள் வழக்கியிருக்கும் செய்தியைப் புரிந்துகொண்டு, 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையிலான பின்புலத்தை ஏற்படுத்திக்கொள்ளும் வகையிலேயே, இந்த புனரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கட்சி​யை மறுசீரமைப்பதற்கான பரிந்துரைகளை பெற்றுக்கொள்வதற்காக, கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்ட மூன்று குழுக்களின் பரிந்துரைகள், பூரண மறுசீரமைப்பின் போது, கருத்தில் கொள்ளப்படவுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ஜே.சீ. அலவத்துவல ஆகியோர் தலைமையில் நியமிக்கப்பட்ட அந்த மூன்று குழுக்களின் பரிந்துரைகளின் பிரகாரம், கட்சியை அடிமட்டத்திலிருந்து புனரமைக்கவேண்டுமென பிரதானமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தப் புனரமைப்பு நடவடிக்கைகள் யாவும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பின்னர் முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் கண்டி பிரதேசத்​தை மையப்படுத்தி, இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலை காரணமாகவே, கட்சியை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகள் காலதாமதமாகிவிட்டன என கட்சித் தகவல் தெரிவிக்கின்றது.

அதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்க ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் நேற்று ஏகமனதாகதீர்மானம் எடுக்கப்பட்டது. இதன்போதே கட்சியின் தலைமைத்துவத்தை புதியவர்களுக்கு வழங்கதயாராக இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழுகூட்டம் நேற்று அலரிமாளிகையில் நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. கூட்டுஎதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்க அனைத்து அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது யோசனைகளை முன்வைத்தனர்.