ஞாயிறு, மார்ச் 18, 2018

ஐ நா நிக்கி காலே அல்விசை சந்திகிறார் சுமந்திரன்

சிறிலங்கா பொறுப்புக் கூறல் விடயத்தில் இதுவரை எதுவும் செய்யவில்லை. இதனால் இந்த விவகாரத்தை அடுத்த
கட்டத்துக்கு நகர்த்துவதற்காக, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சிறிலங்கா மீது உலகளாவிய நியாயாதிக்கத்தை அழுத்துவதற்கு உறுப்பு நாடுகளைத் தான் ஊக்குவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சில நாடுகளில், வேறு நாடுகளின் போர்க் குற்றவாளிகளைக் கைது செய்து விசாரிக்கவும் தண்டனை வழங்கவும் சட்ட ஏற்பாடுகள் உள்ளன. அதனை அந்தந்த நாடுகள் செயற்படுத்த வேண்டும்.இதுவே ஆணையாளர் வலியுறுத்தும் உலகளாவிய நியாயாதிக்கம். இதனை ஐ.நா. மனித உரிமைகள் சபையினால் நேரடியாகச் செயற்படுத்த முடியாது.

எனவே அதனைச் செய்வதற்கு அமெரிக்கா தலைமையேற்க வேண்டும். போர்க் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் உள்ள ஏனைய நாடுகளும் அதனைச் செயற்படுத்துவதற்கு ஊக்குவிக்க வேண்டும். இவைகளை வலியுறுத்தவே நான் அமெரிக்கா செல்கிறேன்" :- திரு சுமந்திரன் 
ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி நிக்கி ஹாலே, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ் உட்பட பல அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகளை சந்தித்து இரண்டுநாட்கள் பேச்சு நடத்தவுள்ளார் சுமந்திரன்.