புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

சனி, மார்ச் 03, 2018

பிராந்திய செயலகங்களை அமைக்க காணாமல் போனோர் பணியகத்துக்கு அதிகாரம்

காணாமல் போனோர் பணியகம் பிராந்திய செயலகங்களை அமைக்க முடியும் என்றும், அதற்கு காணாமல் போனோர் பணியக சட்டத்தில் இடமிருப்பதாகவும், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலர் சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் பணியகத்தின் கிளைச் செயலகங்கள் வடக்கு, கிழக்கில் அமைக்கப்பட வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்களின் அமைப்புகளும், தமிழ் அரசியல் கட்சிகளும், பொது அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.

இந்தநிலையில், இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலர் சிவஞானசோதி, “தேவைகளின் அடிப்படையில் பிராந்திய ரீதியான செயலகங்களை அமைப்பதற்கு, காணாமல் போனோர் பணியக சட்டம் இடமளிக்கிறது.

இந்தச் சட்டத்தின் படி, கொழும்பில் தலைமை பணியகம் இருக்கும். பிராந்திய செயலகங்களை பொருத்தமான இடங்களில் அமைப்பது குறித்து சுதந்திர ஆணைக்குழுவே தீர்மானிக்க முடியும்.

பிராந்திய ரீதியாக அமைக்கப்படும் செயலகங்கள் எப்போதும் நிரந்தரமானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு இடத்தில் உள்ள செயலகத்தை இன்னொரு இடத்துக்கு மாற்ற முடியும்” என்று குறிப்பிட்டார்.