தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வெள்ளி, மார்ச் 02, 2018

ஜெனிவா செல்கிறது தமிழ் மக்கள் பேரவை

தமிழ் மக்கள் பேரவையைப் பிரிதிநிதித்துவப்படுத்தி சிலர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்கவுள்ளனர் என்று வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட வடமாகாண முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,“இக் கலந்துரையாடலில், நடைபெற்று முடிந்த தேர்தல் தொடர்பாக பல விடயங்களை பேசியிருந்தோம். இதுவரை காலமும் தமிழ்த் தலைமைகள் கூறி வந்த கருத்துக்களில், தேர்தலின் பின்னர், எவ்வாறான மாற்றங்கள், வேற்றுமைகள் ஏற்பட்டுள்ளன என்பன தொடர்பாக கலந்துரையாடியிருந்தோம். மேலும், தமிழ் மக்கள் பேரவையானது மக்கள் இயக்கமாகவே இருக்க வேண்டும் என்பதுடன், கட்சி ரீதியான எந்த விதத்திலும் செயற்படுவதில்லை என்பது தொடர்பான விடயங்களை கலந்துரையாடியிருந்தோம்.

இதுவரை காலமும் தமிழ் மக்கள் பேரவையானது ஒர் யாப்பை கொண்டிருக்காத நிலையில், அதற்கான கட்டுமானத்தை உருவாக்குவதற்கு 11 பேரைக் கொண்ட குழுவை அமைத்துள்ளோம். இக்குழு அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அத்துடன் மக்களுக்கு அரசியல் தொடர்பான விளக்கங்களை கொடுப்பதுக்காக திருகோணமலையில் அடுத்த கூட்டமொன்றை நடாத்த ஏற்பாடு செய்யவுள்ளதுடன், இளைஞர் அணி ஒன்றை உருவாக்குவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது” எனத் தெரிவித்தார்.

இதேவேளை தற்போது இடம்பெற்று வரும் ஜெனிவா கூட்டம் தொடர்பாக கேள்வி எழுப்பட்ட போது, “அங்கு தமிழ் மக்கள் பேரவையில் இருந்து சிலர் செல்லவுள்ளதாக” தெரிவித்தார்.