www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

சனி, மார்ச் 17, 2018

ஐ.நா மனித உரிமை ஆணையாளரைச் சந்திக்கும் இலங்கை அரசின் முயற்சி தோல்வி

ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் சயிட் அல் ஹூசை­னு­டன் பேச்சு நடத்­த நேரம் ஒதுக்­கித் தரு­மாறு இலங்கை அரசு விடுத்த வேண்­டு­கோளை ஐ.நா. மனித உரி­மை­கள் சபை நிரா­க­ரித்­தி­ருப்­ப­தாக உயர்­மட்ட இரா­ஜ ­தந்­தி­ர­வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

இலங்­கை­யில் அண்­மை­யில் நடை­பெற்ற வன்­மு­றைச் சம்­ப­வங்­கள் குறித்து மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் ஹூசை­னுக்கு விளக்­க­ம­ளிக்­கத் தீர்­மா­னித்த இலங்கை அரசு, அவ­ரைச் சந்­திக்க அனு­மதி கோரி­யி­ருந்­தது. ஜெனி­வா­வி­லுள்ள இலங்­கைக்­கான வதி­வி­டப் பிர­தி­நிதி அலு­வ­ல­கம் ஊடாக இந்­தக் கோரிக்கை விடுக்­கப்­பட்­டி­ருந்­தது.ஆனால், இலங்­கை­யின் அண்­மைக்­கால வன்­மு­றை­கள் தொடர்­பில் கடும் அதி­ருப்தி அடைந்­துள்ள மனித உரி­மை­கள் சபை, இந்­தச் சந்­திப்­புக்­கான அனு­ம­தியை வழங்க மறுத்­தி­ருக்­கி­றது.

இலங்­கை­யின் நிலைப்­பாடு குறித்து சபைக் கூட்­டத்­தொ­ட­ரில் விளக்­க­லாம் என­வும், அதுவே இப்­போ­தைய சூழ்­நி­லை­யில் வெளிப்­ப­டைத்­தன்மை வாய்ந்­த­தாக இருக்­கும் என­வும் மனித உரி­மை­கள் சபை இலங்கை அர­சுக்கு இரா­ஜ­தந்­திர ரீதி­யில் தெரி­வித்­தி­ருப்­ப­தாக அறி­ய­மு­டி­கின்­றது