தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

செவ்வாய், மார்ச் 06, 2018

கண்டியில் தற்போதைய நிலைமை என்ன ? தீயில் கருகி இளைஞர் பலி

கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தையடுத்து தற்போது நிலைமை வழமைக்குத் திரும்புவதாக தெரிவித்தார்.
இதேவேளை, வன்முறைச் சம்பவத்தையடு
த்து அங்கு ஏற்பட்ட தீயில் சிக்கி இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சனநடமாட்டம் குறிப்பிட்டளவில் இருப்பதாகவும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
நேற்று நண்பகலில் இருந்து மெதுவாக ஆரம்பித்த வன்முறைச் சம்பவங்கள் மாலையாகும் போது பலத்த வன்முறையாக மாறியதாகவும் பின்னர் அங்கு பெய்த கடும் மழையையடுத்த ஓரளவு தணிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் நேற்றிரவு சிறு சிறு கல்வீச்சுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.நேற்று அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச்சட்டம் இன்று காலை 6 மணியளவில் தளர்த்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 10 க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களும் 100 க்கும் மேற்பட்ட கடைகளும் உடைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் சம்பவம் இடம்பெற்ற பகுதியை அமைச்சர்கள் நேரில் வந்து பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.