தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

ஞாயிறு, மார்ச் 18, 2018

அமிர்தலிங்கம் உருவச் சிலையை திறந்து வைத்தார் சம்பந்தன்

முன்­னாள் எதிர்க்கட்­சித் தலை­வ­ரும் தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யின் முன்­னாள் தலை­வ­ரு­மான அப்­பாப்­பிள்ளை அமிர்­த­லிங்­கத்­தின் உரு­வச் சிலை இன்று வலி.மேற்கு பிர­தேச சபை­யில் திறந்து வைக்­கப்­பட்டது.
சுழிபுரத்தில் உள்ள வலி.மேற்கு பிரதேச சபை முன்றலில் அமைக்கப்பட்ட அமிர்தலிங்கத்தின் திருவுருவச்சிலையை எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் திறந்து வைத்தார்.
முன்­னாள் எதிர்க்கட்­சித் தலை­வ­ரும் தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யின் முன்­னாள் தலை­வ­ரு­மான அப்­பாப்­பிள்ளை அமிர்­த­லிங்­கத்­தின் உரு­வச் சிலை இன்று வலி.மேற்கு பிர­தேச சபை­யில் திறந்து வைக்­கப்­பட்டது. சுழிபுரத்தில் உள்ள வலி.மேற்கு பிரதேச சபை முன்றலில் அமைக்கப்பட்ட அமிர்தலிங்கத்தின் திருவுருவச்சிலையை எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் திறந்து வைத்தார்.யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா மற்றும் பொதுச்செயலாளர் துரைராஜசிங்கம் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்கள் உள்ளூராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
.