தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வெள்ளி, மார்ச் 16, 2018

ஜெனிவாவில் மாற்றுப்பொறிமுறைக்கு ஆதரவு கோருவார் அல் ஹுசைன்

ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை குறித்த இரண்டு விவாதங்கள் நடைபெறவுள்ளன. இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குவதற்கா மாற்று பொறிமுறையை முன்னெடுக்குமாறு வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏற்கனவே ஜெனிவா வளாகத்தில் நடைபெற்றுவரும் இலங்கை தொடர்பான உபகுழுக்கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றியிருந்த செயிட் அல் ஹுசைன் இலங்கை தொடர்பான விடயத்தில் தாம் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட மக்கள் பக்கமே நிற்பதாக கூறியிருந்தார். அந்தவகையில் இன்று நடைபெறும் விவாதம் மற்றும் எதிர்வரும் 21 ஆம்திகதி நடைபெறும் விவாதங்களின் போது இந்த மாற்றுப் பொறிமுறை தொடர்பில் செயிட் அல் ஹுசைன் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையானது 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு பின்னர் 2017 ஆம் ஆண்டு நீடிக்கப்பட்ட இலங்கை குறித்த பிரேரணையை இலங்கை இதுவரை முழுமையாக அமுல்படுத்தவில்லை என்ற விடயத்தை செய்ட் அல் ஹுசைன் அதிருப்தியுடன் வெளிப்படுத்துவார் என தெரிவிக்கப்படுகின்றது.