புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

ஞாயிறு, மார்ச் 18, 2018

ஐதேக புதிய வியூகம்

பிரதமருக்கு எதிராக கூட்டு எதிரணி முன்வைக்கவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சிறிலங்கா சுதந்திர
கட்சியின் பல உறுப்பினர்கள் ஆதரவை வெளிப்படுத்தவுள்ள நிலையில், இந்தத் திட்டத்தை முறியடிக்கும் நோக்கில், ஐக்கிய தேசிய கட்சி, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான யோசனையை நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளது.
பிரதமருக்கு எதிராக கூட்டு எதிரணி முன்வைக்கவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சிறிலங்கா சுதந்திர கட்சியின் பல உறுப்பினர்கள் ஆதரவை வெளிப்படுத்தவுள்ள நிலையில், இந்தத் திட்டத்தை முறியடிக்கும் நோக்கில், ஐக்கிய தேசிய கட்சி, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான யோசனையை நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளது.

கட்சியின் சட்ட ஆலோசகர்களது திட்டத்தின் அடிப்படையில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதாக உறுதி வழங்கியே இந்த அரசாங்கம்ஆட்சிக்கு வந்தது. ஆனால் அந்த அதிகாரம் முழுமையாக நீக்கப்படவில்லை. இந்தநிலையில் குறித்த நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவதற்கு, ஜே வி பி, தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளும் ஆதரவளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகிந்தவினால் இனி ஜனாதிபதியாக முடியாது என்ற நிலையில், பிரதமருக்கான அதிகாரத்தை கூட்டும் இந்த நடவடிக்கைக்கு மகிந்த அணியும் ஆதரவளிக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. இவற்றைக் கருத்திற் கொண்டே ஐக்கிய தேசிய கட்சி, நிறைவேற்று அதிகாரத்தை ரத்துசெய்யும் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.