தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

ஞாயிறு, மார்ச் 18, 2018

ஆட்சியைக் கவிழ்க்க வர்த்தகர் வீட்டில் இரகசிய சந்திப்பு!

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் கூட்டு ​எதிரணியைச் சேர்ந்த குழுவினர் பொரளையில் உள்ள பிரபல வர்த்தகர்
ஒருவரின் வீட்டில், இரகசிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர். நேற்று இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், கூட்டு எதிரணி சார்பில் பசில் ராஜபக்ஷ, மஹிதானந்த அழுத்கமகே, வாசுதேவ நாணயகார, டலஸ் அலஹபெரும மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் கூட்டு ​எதிரணியைச் சேர்ந்த குழுவினர் பொரளையில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவரின் வீட்டில், இரகசிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர். நேற்று இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், கூட்டு எதிரணி சார்பில் பசில் ராஜபக்ஷ, மஹிதானந்த அழுத்கமகே, வாசுதேவ நாணயகார, டலஸ் அலஹபெரும மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில், அநுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த் மற்றும் டிலான் பெரேரா ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமருக்கு எதிராகக் கொண்டு வரவிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கே, இக்கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.