www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

சனி, மார்ச் 17, 2018

மாவை சேனாதிராஜாவை முதலமைச்சராக்கிவிட்டு விக்கியை தேசிய அரசியலுக்குள் கொண்டுவரவேண்டும் சிறிதரன் எம்.பி. தெரிவிப்பு ஐ.நா.விவகாரங்கள் விக்கியிடம் ஒப்படைக்கப்படவேண்டும் என்கிறார்

எதிர்­வரும் மாகாண சபை தேர்­தலில் இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ரா­ஜாவை வடக்கு முத­லமைச் சராக்­கி­விட்டு சி.வி.விக்­கி­னேஸ்­வ­ரனை தேசிய அர­சி­ய­லுக்குள் கொண்­டு­வ­ர­வேண்டும். அவரை தேசியத் தலை­வ­ராக்கி சர்­வ­தேச விட­யங்­களை கையாள இட­ம­ளிக்­க­வேண்டும் என்று கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­ஞா னம் சிறி­தரன் தெரி­வித்தார். ஐ.நா. மனித உரிமை பேர­வையின் கூட்டத் தொடரில் கலந்­து­கொள்­வ­தற்­காக ஜெனிவா வந்­ துள்ள சிறி­தரன் எம்.பி. மாவை கேச­ரிக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அதில் மேலும் குறிப்­பி­டு­கையில்

எதிர்­வரும் மாகாண சபை தேர்­தலில் இலங்கை தமி­ழ­ரசு கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ரா­ஜாவை முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக கள­மி­றக்கி அவரை வடக்கு முத­ல­மைச்­ச­ராக்­கி­வி­ட­வேண்டும். மாவை சேனா­தி­ராஜா மூத்த தலைவர்.

கடந்த முறை சி.வி. விக்­கி­னேஸ்­வ­ரனை முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக கள­மி­றக்க முன்னர் மாவை சேனா­தி­ரா­ஜாவே போட்­டி­யி­ட­வி­ருந்தார். பின்னர் மாவை சேனா­தி­ராஜா அதனை விட்­டுக்­கொ­டுத்தார். அப்­போது தாங்கள் இரு­வரும் போட்­டி­யிட்டு முத­ல­மைச்சர் பத­வியை பகிர்ந்­து­கொள்­வ­தாக ஆரம்­பத்தில் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் குறிப்­பிட்­டி­ருந்தார்.

எவ்­வா­றெ­னினும் தற்­போ­தைய நிலை­மையில் எதிர்­வரும் மாகாண சபை தேர்­தலில் இலங்கை தமி­ழ­ரசு கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ரா­ஜாவை முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக கள­மி­றக்­க­வேண்டும்.அத்­துடன் சி.வி.விக்­கி­னேஸ்­வ­ரனை தேசிய அர­சி­ய­லுக்கு கொண்­டு­வ­ர­வேண்டும். அவரை தேசிய தலை­வ­ராக்கி சர்­வ­தேச விட­யங்­களை கையாள இட­ம­ளிக்­க­வேண்டும்.

அவரை தேசிய அர­சி­ய­லுக்குள் கொண்டு வந்து தேசிய தலை­வ­ராக்­கி­வி­ட­வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச விடயங்கள் பாதிக்கப்பட்ட மக்களின் விடயங்கள் போன்றவற்றை கையாள்வதற்கான பொறுப்பை விக்கினேஸ்வரனுக்கு வழங்கவேண்டும் என்றார்.