புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

திங்கள், மார்ச் 05, 2018

ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் அரசு-வலியுறுத்துகிறார் சம்பந்தன்

இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தில் இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்ட 30/1 பிரேரணையை நடைமுறைப்படுத்த வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர். சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

திருகோணமலையில் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது

கடந்த காலத்தில் ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்ட பல பிரேரணைகளை நடைமுறைப்படுத்த தவறிவிட்டது.

இந்த பிரேரணைகளை நடைமுறைப்படுத்தாமையிட்டு சிலர் அதிருப்தியடைந்திருந்தாலும் அந்த செனய்முறையை கைவிடக்கூடாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.