தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

சனி, மார்ச் 10, 2018

மட்டக்களப்பில் குண்டு வைத்தார் என தேடப்பட்ட நபர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு, நாவலடி பகுதியிலுள்ள பாழடைந்த கட்டிடமொன்றிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று
மீட்கப்பட்டுள்ளது. ஆரையம்பதி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீட்கப்பட்ட குண்டுகளுடன் தொடர்புடையவரென தேடப்பட்ட நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். கடந்த சில நாட்களாக காணாமல்போயிருந்த நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 29 வயதுடைய ஆரையம்பதி கதிர்காமர் வீதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் பிரியராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு, நாவலடி பகுதியிலுள்ள பாழடைந்த கட்டிடமொன்றிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. ஆரையம்பதி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீட்கப்பட்ட குண்டுகளுடன் தொடர்புடையவரென தேடப்பட்ட நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். கடந்த சில நாட்களாக காணாமல்போயிருந்த நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 29 வயதுடைய ஆரையம்பதி கதிர்காமர் வீதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் பிரியராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.