புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மார்., 2018

வடக்கில் மீண்டும் இராணுவத்தின் சிகையலங்கார நிலையங்கள்

வடக்­கில் இரா­ணு­வத்­தி­னர் பொது­மக்­க­ளுக்­கென மீண்­டும் சிகை அலங்­க­ரிப்பு நிலை­யங்­களை நடத்­தத் தொடங்­கி­யுள்­ள­னர். அது மட்­டு­மன்றி பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு நவீன முறை என்­று­கூறி மாணவ ஒழுக்­கங்­களை மீறும் வகை­யி­லும் இரா­ணு­வத்­தி­னர் முடி­வெட்­டு­கின்­ற­னர்.
வடக்­கில் இரா­ணு­வத்­தி­னர் பொது­மக்­க­ளுக்­கென மீண்­டும் சிகை அலங்­க­ரிப்பு நிலை­யங்­களை நடத்­தத் தொடங்­கி­யுள்­ள­னர். அது மட்­டு­மன்றி பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு நவீன முறை என்­று­கூறி மாணவ ஒழுக்­கங்­களை மீறும் வகை­யி­லும் இரா­ணு­வத்­தி­னர் முடி­வெட்­டு­கின்­ற­னர்.

இவ்­வாறு தமது முகாம்­க­ளுக்­குள் பொது­மக்­களை அழைத்து முடி­வெட்­டு­வது எமக்­கும் ஒட்­டு­மொத்த சமூ­கத்­துக்­கும் பாதிப்பு இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வடக்கு மாகாண அழ­கக சங்­கங்க ளின் சம்­மே­ள­னம் தெரி­வித்­துள்­ளது.

வடக்­கில் முன்னர் பல இடங்­க­ளில் இரா­ணு­வத்­தி­ன­ரால் சிகை அலங்­க­ரிப்பு நிலை­யங்­கள் நடத்­தப்­பட்­டன. இரா­ணு­வத்­தி­னர் அவ்­வாறு செயற்­ப­டு­வ­தால் எமக்கு உரிய வரு­மா­னம் இல்லை, அனை­வ­ருக்­கு­மான சங்­கத்­தின் விதி­மு­றை­கள் மீறப்­ப­டு­கின்­றன. எனவே இரா­ணு­வத்­தி­னர் சிகை அலங்­க­ரிப்பு நிலை­ யங்­களை நடத்­தக்­கூ­டாது.

அத­னைத் தடுத்து நிறுத்­த­வேண்­டும் என சம்­மே­ள­னத்­தி­னர் கடந்த நவம்­பர் 30ஆம் திகதி வடக்கு மாகா­ண­சபை ஆளு­நர் ரெஜி­னோல்ட் குரே­யு­ட­னான கலந்­து­ரை­யா­ட­லில் கோரி­னர். அத­னை­ய­டுத்து இரா­ணு­வத்­தி­னர் குறித்த சிகை அலங்­க­ரிப்பு நிலை­யங்­களை இயக்­க­வில்லை.

தற்­போது மீண்­டும் வட­ம­ராட்சி, கிளி­நொச்சி, பம்­பை­மடு ( வவு­னியா) போன்ற பிர­தே­சங்­க­ளில் மீண்­டும் எமது சிகை அலங்­கா­ரத் தொழி­லைப் பாதிக்­கும் நோக்­கு­டன் இரா­ணு­வத்­தி­னர் தொழில் புரி­கின்­ற­னர். அதனை உடன் நிறுத்த நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை கிளி­நொச்சி தலை­மை­ய­கத்­தில் சம்­மே­ள­னத்­தின் ஐந்து மாவட்­டச் சங்­கத்­தி­ன­ரும்­கூடி தீர்­மா­னங்­கள் எடுக்­கப்­பட்­டன.

வடக்கு மாகாண சபை­யின் கல்வி அமைச்சு அறி­வித்­த­தற்கு அமை­வாக பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு ஏற்­ற­வ­கை­யி­லேயே மாண­வர்­க­ளுக்கு சிகை அலங்­கா­ரம் செய்­யப்­பட வேண்­டும் என சம்­மே­ள­னம் மாவட்ட சங்­கங்­க­ளுக்கு தெரி­யப்­ப­டுத்­தி­யுள்­ளது. இரா­ணுவ முகா­மில் பொது­மக்­க­ளுக்­கும், மாண­வர்­க­ளுக்­கும் நவீன முறை­யில் சிகை அலங்­கா­ரம் செய்வதால் பாட­சாலை மாண­வர்­கள் விட­யத்­தில் எமது சம்­மே­ள­னம் பெரும் நெருக்­க­டிக்­குத் தள்­ளப்­ப­டு­வ­தால் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­கள் இரா­ணுவ முகா­மில் பொது மக்­க­ளுக்­கான சிகை அலங்­கா­ரத்தை உடன் நிறுத்த நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கேட்­டுக் கொள்­கி­றோம்.

சிகை அலங்­க­ரிப்பு நிலை­யத்­தில் சுகா­தா­ரத்­தைப் பேணு­மு­க­மாக தொழில் புரி­வோர் கட்­டைக்­காற்­சட்­டை­யு­டன் (யம்­பர்) தொழில் புரி­தல், புகைத்­தல், வெற்­றிலை போடு­தல், மது அருந்­து­தல் போன்­றன தடை செய்­யப்­பட்­டுள்­ளன. மீறு­வோர் மீது சுகா­தார அமைச்­சின் அனு­ம­தி­யு­டன் நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­டும்.

புதிய சிகை அலங்­கார நிலை­யம் அமைக்­கும்­போது மாவட்­டச் சங்­கங்­க­ளின் விதி­மு­றையை மீறு­வோர் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும். ஒத்­து­ழைப்பு வழங்­காத பட்­சத்­தில் பிர­தேச சபை, சுகா­தாரத்திணைக்களம், மாவட்­டச்­சங்­கங்­க­ளின் அனு­ம­தி­யு­டன் அனு­மதி ரத்­துச்­செய்­யப்­ப­டும் என்ற தீர்­மா­னங்­க­ளும் நிறை­வேற்­றப்­பட்­டன.

வடக்கு மாகாண அழகு நிலை­யங்­களை பார்­வை­யி­டு­வ­தற்கு கண்­கா­ணிப்பு குழு­வி­ன­ருக்­கான அடை­யாள அட்­டை­யும் அன்று வழங்­கப்­பட்­டது என்று அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டது.

ad

ad