தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

செவ்வாய், மார்ச் 06, 2018

அக்கரைப்பற்றில் தமிழர் மீது தாக்குதல்! – தமிழ் – முஸ்லிம் இடையில் முறுகல் நிலை

கண்டியில் இடம்பெற்ற சம்பவத்தை கண்டித்து அக்கரைப்பற்று முஸ்லிம்கள் தங்களது கண்டனத்தை தெரிவிக்க ஹர்த்தால் போடப்பட்டுள்ளது .அங்கு வந்த தமிழ் இளைஞர் ஒருவர் புகைப்படம் எடுத்தபோது இரு முஸ்லிம் இருவர் அந்த இளைஞனை தாக்கியுள்ளனர் . இதனையடுத்து அங்கு தமிழ் மக்கள் அவ்விடத்திற்கு வருகை தந்துள்ளனர்.

அதன் பின் போலீசார் , இராணுவம் வரவழைக்கப்பட்டு தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது .ஏற்கனவே நான்கு பேர் செய்த வேலையால் ஒரு சமூகத்திற்கு இப்படியான இன வெறி தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் இன்னும் இன்னும் இப்படியான சம்பவங்கள் இடம்பெறகூடாது .