தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

புதன், மார்ச் 07, 2018

வவுனியாவுக்கும் பரவும் பதற்றம்

வவுனியாவில் சர்வமத தலைவர்கள் மற்றும் முப்படையினர் பொலிஸாரை அழைத்து அரசாங்க அதிபர் இன்று அவசர சந்திப்பொன்றினை மேற்கொண்டார். வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் 2 மணியளவில் அரசாங்க அதிபர் சோமரத்தின விதான பத்திரன தலைமையில் ஆரம்பமான இச் சந்திப்பில் சர்வ மத தலைவர்கள் கலந்து கொண்டு நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஆலோசனைகளை வழங்கியிருந்தனர்.

வவுனியாவில் நேற்றைய தினம் மதினாநகர் பள்ளிவாசலுக்கு முன்பாக இனந்தெரியாதோரால் டயர் எரிக்கப்பட்ட சம்பவத்தினை அடுத்து அவசரமான இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. வவுனியா மாவட்டத்தில் இவ்வாறான அசம்பாவிதங்கள் ஏற்படாமல் அனைவரும் ஒத்துழைக்க வெண்டும் என சர்வ மத தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். இதன்போது பொலிஸ் அதிகாரிகள், இராணுவ, விமானப்படை, கடற்படை உயர் அதிகாரிகள், வவுனியா மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

அதேவேளை,அம்பாறை மற்றும் கண்டி, தெல்தெனிய பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் எதிரொலியினால் வவுனியா - செட்டிக்குளத்தில் இராணுவத்தினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இன கலவரம் வவுனியாவிலும் இடம்பெறலாம் என்ற அச்சத்தில் இவ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.