புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

செவ்வாய், மார்ச் 13, 2018

தவியைத் தக்க வைக்க தேர்தல் ஆணைக்குழுவை நாடினார் அனந்தி

இலங்கைத் தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்குவதால், தனது மாகாண சபை உறுப்பினர் பதவி பறிபோகாமல் இருப்பதற்கு, வடக்கு மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன், தேர்தல்கள் ஆணைக்குழுவின் உதவியை நாடியுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் 2013ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆனந்தி சசிதரன் போட்டியிட்டிருந்தார்.இவரைக் கட்சியிலிருந்து நீக்குவதற்கு, கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கட்சியிலிருந்து நீக்கப்படுவதால் அவரது மாகாண சபை உறுப்பினர் பதவியும் பறிக்கப்படலாம். இதனைத் தடுப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவை, அனந்தி சசிதரன் நாடியுள்ளார். பதவியைக் காப்பாற்றுவதற்கு நீதிமன்றத்தை நாடுவதுதான் ஒரே வழி என்று தேர்தல்கள் ஆணைக்குழு பதிலளித்துள்ளது.