புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

செவ்வாய், மார்ச் 20, 2018

சசிகலாவுக்கு பரோல்: பெங்களூர் சிறை நிர்வாகத்தின் அதிரடி முடிவு

சசிகலாவின் கணவர் நடராஜன் இன்று அதிகாலை மரணம் அடைந்த நிலையில் தனது கணவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள 15 நாட்கள் பரோல் வேண்டும் என்று சசிகலாவின் தரப்பில் விண்ணப்பம் வழங்கப்பட்டது. இந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, நடராஜனின் இறப்பு சான்றிதழ் பெற்றவுடன் சசிகலாவுக்கு பரோல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி, சசிகலாவுக்கு 15 நாள் பரோல் வழங்கியுள்ளது பெங்களூரு சிறை நிர்வாகம். இதனையடுத்து இன்னும் சில நிமிடங்களில் சசிகலா பெங்களூர் சிறையில் இருந்து வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூரில் இருந்து வரும் சசிகலா சென்னைக்கு வருவாரா? அல்லது நேராக நடராஜனின் சொந்த ஊரில் இறுதிச்சடங்கு

நடக்கும் இடத்திற்கு வருவாரா? என்பது குறித்த தகவல் இன்னும் சிலநிமிடங்களில் தெரியவரும்