புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மார்., 2018

எல்லா சம்மனுக்கும் ஆஜரான நிலையில், ஏன் கைது? கோர்ட்டில் பரபரப்பு வாதம்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நேற்று சென்னை
விமான நிலையத்தில் சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். உடனே, டெல்லி அழைத்துச் செல்லப்பட்ட அவரிடம் பல மணி நேரம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

பின்னர், மாலை பாட்டியாலா ஹவுஸ் பகுதியில் உள்ள சி.பி.ஐ கோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, கார்த்தி சிதம்பரம் முறையாக விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனவே 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என சி.பி.ஐ வழக்கறிஞர் வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கார்த்தி சிதம்பரத்தின் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கு அவர் மீது போடப்பட்டுள்ளதாக கூறி அவரை ஜாமீனில் விடுவிக்க கேட்டுக்கொண்டார்.

இரு தரப்பு வாதங்கள் முடிந்த பின்னர், கார்த்தி சிதம்பரத்தை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு நீதிபதி அனுமதி அளித்தார். இதனை அடுத்து, கார்த்தி சிதம்பரத்திடம் நேற்று மாலை முதல் அதிகாரிகள் துருவித்துருவி விசாரணை நடத்தினர்.

விசாரணை காலம் முடிந்த நிலையில், இன்று பிற்பகலில் அவர் மீண்டும் பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, போதிய கால அவகாசம் இல்லாததால் கார்த்தி சிதம்பரத்திடம் சரியாக விசாரணை நடத்த முடியவில்லை.

அவர் நல்ல உடல்நலத்துடன் உள்ளார் எனவே மேலும், 14 நாட்கள் கால அவகாசம் வழக்க நீதிபதியிடம் சி.பி.ஐ சார்பில் ஆஜரான கூடுதல் சொசிலிட்டர் தஷார் மேஹ்தா முறையிட்டார்.

வழக்கில் தொடர்புடைய இந்திராணி முகர்ஜி, கார்த்தி சிதம்பரத்தை ஒன்றாக வைத்து விசாரிக்க வேண்டியதுள்ளது என வாதிட்ட சி.பி.ஐ வழக்கறிஞர் தஷார் மேஹ்தா, சில முக்கிய ஆவணங்களையும் நீதிபதியிடம் காட்டினார். இதில், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த வழக்கு விநோதமானது என்றும் உடல்நலம் நன்றாக இருந்தும் கார்த்தி சிதம்பரத்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விடிய, விடிய பொதுவார்டில் காக்க வைத்ததாக அவரது வழக்கறிஞர் புகாரளித்தார்.

எல்லா சம்மனுக்கும் தவறாமல் கார்த்தி சிதம்பரம் ஆஜராகி விளக்கம் அளித்து வரும் நிலையில், சிபிஐ எப்படி அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என கூறலாம் எனவும் அபிஷேக் சிங்வி வாதிட்டார்.

மேலும், இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலத்தை வெளியில் விட்டது ஏன்? எனவும் சிங்வி கேள்வி எழுப்பினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சற்று நேரத்தில் உத்தரவு பிறப்பிக்க உள்ளார்.

இதற்கிடையே, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து, வரும் 7-ம் தேதி ஜாமீன் மனு தொடர்பாக உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி அறிவித்தார்

ad

ad