தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

சனி, மார்ச் 17, 2018

கண்டி வன்­மு­றை­களை கண்­டித்து சென்­னையில் முற்­றுகைப் போராட்டம்

முஸ்­லிம்­களை மைய­மாக வைத்து அண்­மை­யில்­ இ­டம்பெற்ற வன்­முறை சம்­ப­வங்­களை கண்­டிக்கும் வகை­யிலும் அதற்கு நீதி­கோ­ரியும் சென்­னையிலுள்ள இலங்கைத் தூத­ர­கத்­தை முற்­று­கை­யிடும் போராட்டம் இன்று சனிக்கிழமை இடம்­பெ­ற­வுள்­ளது.

சீமான் தலை­மை­யி­லான நாம் தமிழர் கட்­சி­யி­ன­ரும் தி.வேல்­மு­ருகன் தலை­மை­யி­லான தமி­ழக வாழ்­வு­ரிமைக் கட்­சி­யி­னரும் கூட்­டாக இணைந்து ஏற்­பாடு செய்­துள்­ள இப்­போ­ராட்­டத்தில் இலங்கை உணர்வா­ளர்கள் அனை­வ­ரையும் பங்­கெ­டுக்­கு­மாறு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

இப் ­போ­ராட்டம் சம்­பந்­த­மாக தமி­ழக வாழ்­வு­ரிமைக் கட்­சியின் தலைவர் தி.வேல்­மு­ருகன் ''கேச­ரி''க்கு தெரி­விக்­கை­யில்,

இலங்­கையில் நடை­பெற்ற யுத்தம் கார­ண­மாக ஏற்­க­னவே எமது உற­வுகள் சிதைக்­கப்­பட்­டுள்­ளனர். பாதிக்­கப்­பட்ட அவர்­க­ளுக்­காக நீதிகோரி போராட்­டங்­க­ளையும் அழுத்­தங்­க­ளையும் தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுத்து வரு­கின்றோம்.

இவ்­வா­றான தரு­ணத்தில் தற்­போது இலங்­கையில் மற்­றொரு சிறு­பான்மை மக்­க­ளான முஸ்­லிம்­களை மைய­மாக வைத்து பல்­வேறு சம்­ப­வங்கள் அந் நாட்டின் பல பாகங்­க­ளிலும் நடை­பெற்­றுள்ளன. அடக்­கு­மு­றைக்கு உட்­ப­டுத்­து­கின்ற எந்­த­வொரு சம்­ப­வங்­களும் கண்­டிக்­கத்­தக்­க­வை­யே­யாகும்.

அத­ன­டிப்­ப­டையில் உட­ன­டி­யாக இத்­த­கைய நட­வ­டிக்­கை­களை கைவிட வேண்டும். தமிழ், முஸ்லிம் மக்­களை சம உரி­மை­யுடன் நடத்தி அவர்­க­ளுக்­கான வாழ்­வு­ரி­மையை உறு­திப்­ப­டுத்த வேண்­டுமென்­பதை அழுத்தம் திருத்­த­மாக இடித்­து­ரைக்கும் வகையில் நாம் மாபெரும் கண்டன முற்­றுகைப் போராட்­டத்­தை மேற்கொள்ளவுள்ளோம்.

இதில் அனைத்து உணர்வாளர்களும் பங்கெடுத்து எமது கண்டனத்தையும் செய்தியையும் இலங்கை அரசாங்கத்துக்கு ெதளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.