தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

திங்கள், மார்ச் 12, 2018

எரிக் சொல்ஹெய்மிடம் உதவி கோரினார் ஜனாதிபதி மைத்திரி

இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்மை ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன நேற்று சந்தித்துள்ளார். எரிக் சொல்ஹெய்ம், ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் வேலைத்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக இருக்கிறார். இந்தியா சென்றிருந்த ஜனாதிபதி, புதுடெல்லியில் அவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்மை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று சந்தித்துள்ளார். எரிக் சொல்ஹெய்ம், ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் வேலைத்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக இருக்கிறார். இந்தியா சென்றிருந்த ஜனாதிபதி, புதுடெல்லியில் அவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, இலங்கையில் தற்போது 28 சதவீதமாக இருக்கின்ற வன அடர்த்தியை, 32 சதவீதமாக அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் குறித்து ஜனாதிபதி விளக்கமளித்துள்ளார்.அத்துடன் சுற்றாடல் பாதுகாப்புக்கான ஐக்கிய நாடுகளின் உதவிகளையும் அவர் கோரி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவைத்தவிர, நோர்வேக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் குறித்தும் இருவரும் கலந்துரையாடியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன