திங்கள், மார்ச் 12, 2018

சமூக ஊடகங்களின் முடக்கத்துக்கு இரு நாட்களில் தீர்வு

சமூக ஊடக வலையமைப்புக்கள் தொடர்பான பிரச்சினைக்கு இரண்டு நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படும் என டிஜிட்டல் உட்கட்டுமான அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 'முகநூல், வட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட சமூக ஊடக வலையமைப்புக்கள் முடக்கப்பட்டுள்ளமை குறித்த பிரச்சினைக்கு இரண்டு நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படும்.

சிலர் சமூக ஊடக வலையமைப்புக்களை மோசமாக பயன்படுத்திய காரணத்தினால் இவ்வாறு முடக்க நேரிட்டது.எனினும் இது பற்றி எனக்கு சரியான பதிலை அளிக்க முடியாது. இலங்கை தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையகம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இயங்குகின்றது.

எவ்வாறெனினும் இந்த விடயம் குறித்து இன்று ஜனாதிபதி செயலகத்தில் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடக வலையமைப்புக்கள் முடக்கப்பட்டுள்ளமையினால் பலர் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர் என்பது எமக்குத் தெரியும். நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படக் கூடிய பதிவுகளை தடுக்கும் நோக்கிலேயே இவை முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.