www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

திங்கள், மார்ச் 12, 2018

தமிழ் அரசியல் பிரமுகர்கள் ஜெனிவாவுக்கு பயணம்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் பங்­கேற்­ப­தற்­காக தமிழ் அர­சியல் கட்­சி­களின் தலை­வர்கள் பலர் ஜெனிவா நோக்கி பயணமாகியுள்ளனர். வட மாகா­ண­ச­பையின் உறுப்­பினர் எம்.கே.சிவா­ஜி­லிங்கம் ஏற்­க­னவே ஜெனிவா சென்­றுள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் இன்று ஜெனி­வாவை சென்­ற­டை­ய­வுள்ளார். கொழும்­பி­லி­ருந்து நேற்று புறப்­பட்ட அவர் லண்டன் சென்று அங்­கி­ருந்து ஜெனிவா செல்­கின்றார்.

இதே­போன்று வட­மா­காண அமைச்சர் ஆனந்தி சசி­த­ரனும் நேற்று ஜெனிவாவுக்குப் பய­ண­மா­கி­யுள்ளார். இவர்­களைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் மாகாண சபை உறுப்­பி­னர்­களும் ஜெனி­வா­வுக்கு செல்­ல­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இவர்கள் அங்கு நடை­பெறும் உப குழுக் கூட்­டங்­களில் பங்­கேற்­ப­துடன் ஜெனி­வா­வி­லுள்ள இரா­ஜ­தந்­தி­ரி­க­ளையும் அரச சார்­பற்ற பிர­தி­நி­தி­க­ளையும் சந்­தித்து கலந்­து­ரை­யாட உள்­ள­துடன் ஆணைக்­குழு அமர்வில் அரச சார்பற்ற அமைப்புக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் உரையாற்றவும் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்