வியாழன், மார்ச் 08, 2018

பள்ளிவாசல் மீது வீச முயன்ற குண்டு வெடித்து இருவர் பலி!

கண்டி மாவட்டத்தில் பள்ளிவாசல் மீது நேற்று குண்டுத் தாக்குதல் நடத்த முயன்ற இரண்டு பேர் அந்தக் குண்டு வெடித்து பலியாகினர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. கட்டுகஸ்தோட்டை பகுதியில் உள்ள, அம்பததென்ன, வேலகட பள்ளிவாசல் மீது நேற்று பிற்பகல் வன்முறைக் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது.இதன்போது, கைக்குண்டு ஒன்றை வீச முற்பட்ட போது, அது வெடித்ததில், வன்முறைக் கும்பலைச் சேர்ந்த இருவர் பலியாகினர். மேலும் மூவர் காயமடைந்தனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேவேளை, இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் மாத்திரமே உயிரிழந்தார் என்று காவல்துறை தரப்புச் செய்திகள் கூறுகின்றன. இந்தச் சம்பவத்தில் பௌத்த பிக்குகளும் காயமடைந்தனர் என்று செய்திகள் பரவிய போதும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதனை நிராகரித்துள்ளார்.

அதேவேளை, நேற்று அக்குறணை பகுதியில் உள்ள கடை ஒன்றின் மீது வன்முறைக் கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலினால், ஏற்பட்ட அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு மற்றொருவர் மரணமானார். பூஜாபிட்டிய பகுதியில் நடந்த வன்முறைகளின் போதும் ஒருவர் மரணமானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.நேற்று அம்பத்தென்ன, உகுரெசப்பிட்டிய, மெனிக்கின்ன, பொலகொல்ல பகுதிகளிலும் வன்முறைகள் இடம்பெற்றுள்ளன.