சனி, மார்ச் 10, 2018

கடையை நொருக்கியது ஆவா குழு! - ஊடகவியலாளரின் கமராவை நொருக்கினார் கடை உரிமையாளர்

யாழ்ப்பாணத்தில், கொக்குவில் பகுதியில் ஆவா குழுவினர் கடை ஒன்றின் மீது நடத்திய தாக்குதலைப் படம் பிடிக்க
முயன்ற ஊடகவியலாளர் ஒருவரின் பெறுமதிவாய்ந்த கமரா, கடை உரிமையாளரால் சேதமாக்கப்பட்டுள்ளது. கொக்குவிலில் உள்ள ஹாட்வெயார் கடை ஒன்றுக்குள் நுழைந்த ஆவா குழுவினர் பொருட்களை அடித்து சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில், கொக்குவில் பகுதியில் ஆவா குழுவினர் கடை ஒன்றின் மீது நடத்திய தாக்குதலைப் படம் பிடிக்க முயன்ற ஊடகவியலாளர் ஒருவரின் பெறுமதிவாய்ந்த கமரா, கடை உரிமையாளரால் சேதமாக்கப்பட்டுள்ளது. கொக்குவிலில் உள்ள ஹாட்வெயார் கடை ஒன்றுக்குள் நுழைந்த ஆவா குழுவினர் பொருட்களை அடித்து சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் ஒருவரின் பெறுமதிவாய்ந்த கமராவை கடை உரிமையாளர் சேதப்படுத்தியுள்ளார். தாக்குதல் சம்பவத்தை செய்தியாக அறிக்கையிட வேண்டாம் என குறித்த செய்தியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர், சுமார் ஐந்து லட்சம் ரூபா பெருமதியான கமராவை கீழே தள்ளி சேதப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளரினால் முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்