தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

திங்கள், மார்ச் 19, 2018

பன்னீர் நெருக்கடி: வருமா அமைச்சரவை மாற்றம்?

அ.தி.மு.க.,வில், நிர்வாகிகள் பட்டியலை அறிவிப்பதில் நீண்ட காலம் எடுத்துக் கொண்டார் முதல்வரும்,
கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிச்சாமி.
இதனால், அணியாக செயல்பட்டபோது, தன்னோடு கூட இருந்தவர்கள் பலருக்கும் கட்சியில் பொறுப்பு அளிக்காததால், அவர்கள் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மீது அதிருப்தியில் இருந்தனர். இதையடுத்து, அவர், பழனிச்சாமிக்கு கடும் நெருக்கடி கொடுக்கவே, நீளமான நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை மாற்றம்:
இதன் தொடர்ச்சியாக, அமைச்சரவையிலும் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என, முதல்வர் பழனிச்சாமிக்கு, துணை முதல்வர் பன்னீர்செல்வம் கடும் நெருக்கடி கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.