தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

செவ்வாய், மார்ச் 20, 2018

மனைவியை அடித்துக் கொன்று விட்டு உயிரை மாய்த்த கணவன்! - இரு குழந்தைகள் நிர்க்கதி

மட்டக்களப்பு - குறிஞ்சாமுனையில் நேற்று மனைவியை அடித்துக் கொலை செய்த கணவன் தனது உயிரையும்
மாய்த்துக் கொண்டார்.
கூலித் தொழிலாளியான 36 வயதுடைய கந்தசாமி வேதநாயகம், 29 வயதுடைய நீலகண்டன் யோகநாயகி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்தனர். நேற்று இரவு நடந்த குடும்பச்சண்டையை அடுத்தே, இந்த இரு மரணங்களும் நிகழ்ந்துள்ளன.
மட்டக்களப்பு - குறிஞ்சாமுனையில் நேற்று மனைவியை அடித்துக் கொலை செய்த கணவன் தனது உயிரையும் மாய்த்துக் கொண்டார். கூலித் தொழிலாளியான 36 வயதுடைய கந்தசாமி வேதநாயகம், 29 வயதுடைய நீலகண்டன் யோகநாயகி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்தனர். நேற்று இரவு நடந்த குடும்பச்சண்டையை அடுத்தே, இந்த இரு மரணங்களும் நிகழ்ந்துள்ளன.

தொடர்ச்சியாக இருவருக்குமிடையில் இரவு வேளைகளில் சண்டை நடைபெறுவதாகவும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டு கணவன் உயிரை மாய்த்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனால், கணவனின் முதலாவது திருமணத்தின் மூலம் பிறந்த 5 வயது மகனும், மரணமான தம்பதியின் 5 மாதக்குழந்தையும் தற்போது பெற்றோரை இழந்து நிர்க்கதிக்குள்ளாகியிருக்கின்றனர்.