தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

ஞாயிறு, மார்ச் 18, 2018

நாளை யாழ்.செல்கிறார் ஜனாதிபதி

யாழ்ப்­பாணம் புனித பத்­தி­ரி­சியார் கல்­லூ­ரியின் தொழில்­நுட்ப ஆய்­வு­கூட கட்­டடம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால
சிறி­சே­ன­வினால் நாளை திறந்து வைக்­கப்­ப­டவுள்ளது. புலம்­பெ­யர்ந்து வாழும் புனித பத்­தி­ரி­சியார் கல்­லூ­ரியின் பழைய மாண­வர்­களின் 30 மில்­லியன் ரூபா நிதி­யு­த­வியில் கட்டப்பட்ட இக்­கட்­டடம் நாளை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் காலை 9.30 மணிக்கு திறந்­து­வைக்­கப்­ப­டு­ம்.
யாழ்ப்­பாணம் புனித பத்­தி­ரி­சியார் கல்­லூ­ரியின் தொழில்­நுட்ப ஆய்­வு­கூட கட்­டடம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் நாளை திறந்து வைக்­கப்­ப­டவுள்ளது. புலம்­பெ­யர்ந்து வாழும் புனித பத்­தி­ரி­சியார் கல்­லூ­ரியின் பழைய மாண­வர்­களின் 30 மில்­லியன் ரூபா நிதி­யு­த­வியில் கட்டப்பட்ட இக்­கட்­டடம் நாளை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் காலை 9.30 மணிக்கு திறந்­து­வைக்­கப்­ப­டு­ம்.

யாழ்.மறை­மா­வட்ட ஆயர் கலா­நிதி ஜஸ்ரின் ஞானப்­பி­ர­காசம் ஆண்­டகை தலை­மையில் நடை­பெறும் இந்­நி­கழ்வில் ஜனா­தி­ப­தி­யுடன் கர்­தினால் மல்கம் ரஞ்சித் ஆண்­டகை, எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன், கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரி­ய­வாசம், கிறிஸ்­தவ விவ­கார அமைச் சர் ஜோன் அம­ர­துங்க, வடக்கு மாகாண ஆளுநர் றெஜிநோல்ட் கூரே, மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் ஆகியோர் சிறப்பு அதி­தி­க­ளாகக் கலந்­து­ கொள்­கின்­றனர்.

29 ஆண்­டு­க­ளாக புனித பத்­தி­ரி­சியார் கல்­லூ­ரியில் பணி­யாற்றி, அதில் 10 ஆண்­டு­க­ளாக - அதி­ப­ராக பணி­யாற்­றிய அருட்­தந்தை எம்.ஜெறோ செல்­வ­நா­யகம் அடி­களார் அண்­மையில் பணி­ஓய்வு பெற்­ற­தை­ய­டுத்து எ.பி. திரு­மகன் அடி­களார் புனித பத்­தி­ரி­சியார் கல்­லூ­ரியின் அதிபர் பொறுப்பை ஏற்­றி­ருந்தார்.

யாழ்.மறை­மா­வட்­டத்தில் பல கல்­வி­மான்­க­ளையும், ஆயர்­க­ளையும் குருக்க­ ளையும் உரு­வாக்­கிய இக்­கல்­லூ­ரிக்கு புலம் ­பெ­யர்ந்து வாழும் பழைய மாண­வர்­ களின் நிதியுதவியுடன் புதிய விஞ்ஞான தொழில் நுட்ப ஆய்வுகூடம் அமையப் பெறுவது வரப்பிரசாதமாகும் என்று கல்லூரி அதிபர் திருமகன் அடிகளார் தெரிவித்தமை குறிப் பிடத்தக்கது.