திங்கள், மார்ச் 12, 2018

யாழ்ப்பாணம், வவுனியாவில் கடும் காற்றுடன் மழை! - மரங்கள் வீழ்ந்து கட்டடங்கள் சேதம்

யாழ்ப்பாணம், வவுனியா உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை தொடக்கம் விட்டு விட்டு மழை பெய்து வருவதுடன், கடும் காற்றும் வீசி வருகிறது. இதனால், பல இடங்களில் மரங்கள் முறிந்தும், கூரைகள் தூக்கி வீசப்பட்டும் பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அலுவலகத்துக்கு பெரிய மரம் ஒன்று சரிந்து விழுந்ததால் மரம் அலுவலகக் கட்டடத்துக்கு சேதம் ஏற்பட்டது. வவனியா கண்டி வீதியிலுள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபை அலுவலகத்தின் வளவிலுள்ள மிகவும் பழமை வாய்ந்த மரம் இன்று பிற்பகல் சரிந்து விழுந்தது. வவுனியாவில் பெய்த மழை மற்றும் கடும் காற்று காரணமாக அலுவலகக் கட்டடத்துக்கு மேல் பாறி வீழ்ந்துள்ளது. அதில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை