தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வெள்ளி, மார்ச் 02, 2018

சிரியாவில் படுகொலைகளை நிறுத்தக் கோரி முள்ளிவாய்க்காலில் நாளை போராட்டம்


சிரியாவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் மனிதப் படுகொலையை நிறுத்தக் கோரி மாபெரும் கவனயீர்ப்பும் கண்டனப்போராட்டமும்
நாளை இடம்பெறவுள்ளது. வடக்கு இளைஞர்கள் ஒன்றிணைந்து, இறுதிப்போர் இடம்பெற்ற முள்ளிவாய்க்காலில் நாளை சனிக்கிழமை காலை 10 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்போராட்டத்தில் கலந்து கொள்வோருக்காக போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது
யாழ்ப்பாணம் நல்லூர் கோவில் முன்றலில் இருந்து காலை 8 மணிக்கும் பருத்தித்துறை பஸ் நிலையத்தில் இருந்து காலை 8 மணிக்கும் விசேட பஸ்கள் புறப்படும். போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் உரிய நேரத்துக்குள் பஸ்கள் புறப்படும் இடத்துக்கு வருகை தருமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.