சனி, மார்ச் 03, 2018

ஐ.நாவின் சிறப்புத் தூதுவர் முகமாலைக்கு வருகிறார்ஆ

ஐ.நாவின் சிறப்புத் தூதுவர் முகமாலைக்கு வருகிறார்ஆட்களுக்கு எதிரான கண்ணிவெடிகளைத் தடை செய்யும் பிரகடனம்
தொடர்பான ஐ.நாவின் சிறப்புத் தூதுவரான இளவரசர், மிரெட் ராட் செயிட் அல் ஹுசேன் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

எதிர்வரும் 4ஆம் நாள் தொடக்கம், 7ஆம் நாள் வரை இவர் சிறிலங்காவில் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நாவின் சிறப்புத் தூதுவரான இளவரசர் மிரெட் ராட் செயிட் அல் ஹுசேன் இந்தப் பயணத்தின் போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரையும், பாதுகாப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சுக்களின் செயலர்கள், இராணுவத் தளபதி மற்றும் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்துவார்.

அத்துடன் எதிர்வரும் 6ஆம் நாள், கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் இடம்பெறும் முகமாலைக்கும் செல்லவுள்ளார்.