புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

ஞாயிறு, ஏப்ரல் 22, 2018

வவுனியா - பம்பைமடு இராணுவ முகாமில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 14

வவுனியா - பம்பைமடு இராணுவ முகாமில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 14 இராணுவத்தினர் திடீரென சுவாசிப்பதற்கு சிரமப்பட்ட நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம், இன்று நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பம்பைமடு இராணுவ முகாமில் இராணுவத்தினர் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில், இராணுவத்தினருக்குத் திடீரென சுவாசப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 14 இராணுவ வீரர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அத்துடன் மேலும் பல இராணுவ வீரர்களுக்கு, பம்பைமடு இராணுவ முகாமில் முதலுதவிச் சிகிச்சையளிக்கப்பட்டதெனத் தெரிவிக்கப்படுகின்றது.