தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வெள்ளி, ஏப்ரல் 20, 2018

அரசாங்கத்திலிருந்து விலகிய சிறிலங்கா சுதந்திரக் கட்சி எம்.பிக்கள் 16

அரசாங்கத்திலிருந்து விலகிய சிறிலங்கா சுதந்திரக் கட்சி எம்.பிக்கள் 16 பேரும் எதிர்க்கட்சியுடன் இணைவது தொடர்பில், எதிர்வரும் மே மாதம் 8 ஆம் திகதிக்கு முன்னர், கடிதம் மூலம் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அறிவிக்கவுள்ளதாக, முன்னாள் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

அத்துடன், மே ​08 ஆம் திகதிக்கு முன்னர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூடி, தேசிய அரசாங்கத்தில் தொடர்ந்து இருப்பதா இல்லையா என்பது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் எனவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.