புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வியாழன், ஏப்ரல் 19, 2018

மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள அன்னை பூபதியின் நினைவிடத்தில் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று இடம்பெற்றது. பூபதியம்மாவின் சகோதரி கண்ணமுத்து பிள்ளையம்மா அன்னையின் திருவுருவபடத்துக்கு மலர்மாலை அணிவித்து ஈகைச்சுடரை ஏற்றினார்.

இதனைத் தொடர்ந்து அவரின் பிள்ளைகள் உறவினர்கள் மற்றும் மட்டு .மாநகர சபை மேஜர் சரவணபவான், அரசியல் கட்சியினர் பொதுமக்கள் மலர் மாலை அணிவித்து ஈகைச்சுடர் ஏற்றி 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் இந்த நிகழ்வு இடம்பெற்றது. நினைவு தூபியில் அரசியல் கட்சிகளே அல்லது அமைப்புக்களே நினைவு தின நிகழ்வுகள் நடாத்த அனுமதிக்க முடியாது என அன்னை பூபதியின் பிள்ளைகள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்திருந்தனர். இந்த நிகழ்வை புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுப்பதற்கு ஊடகவியளாளர்களைத் தவிர ஏனையோருக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது