புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

செவ்வாய், ஏப்ரல் 24, 2018

சொந்த மண்ணில் மீள் குடியேற்றம் செய்ய கோரி சுமார் ஓராண்டுக்கு மேலாக தமது போராட்டத்தை தொடர்ந்த இரணைதீவு மக்கள் நேற்றுக் காலை படகுகள் மூலம் இரணைதீவு சென்று ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். படகுகள் மூலம் இரணைதீவுக்குச் சென்ற மக்கள் அங்குள்ள தேவாலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து தமது சொந்த மண்ணில் மீள்குடியேற்றம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் செய்ய முயற்சித்தனர். அவர்களுடன் பேச்சுவார்த்தைகயில் ஈடுபட்ட கடற்படையினர், உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர். எனினும் அந்தக் கோரிக்கையினை ஏற்றுக்கொள்ளாத இரணைதீவு கிராம மக்கள் தமது கிராமத்தில் உள்ள கோயிலுக்கு அருகாமையில் தமது போராட்டத்தை மேற்கொண்டனர். குறித்த பிரச்சினை தொடர்பில் தீர்வு கிடைக்காத நிலையில் இரணைதீவு கிராமத்தில் தங்கி நின்று போராட்டங்களை முன்னெடுப்பதாக மக்கள் முடிவுகளை மேற்கொண்டனர். அதற்கு அமைவாக சுமார் 400 குடும்பங்கள் வரை இரணை தீவு கிராம மத்தில் தங்கியிருந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்

சொந்த மண்ணில் மீள் குடியேற்றம் செய்ய கோரி சுமார் ஓராண்டுக்கு மேலாக தமது போராட்டத்தை தொடர்ந்த இரணைதீவு மக்கள் நேற்றுக் காலை படகுகள் மூலம் இரணைதீவு சென்று ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். படகுகள் மூலம் இரணைதீவுக்குச் சென்ற மக்கள் அங்குள்ள தேவாலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து தமது சொந்த மண்ணில் மீள்குடியேற்றம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் செய்ய முயற்சித்தனர்.

அவர்களுடன் பேச்சுவார்த்தைகயில் ஈடுபட்ட கடற்படையினர், உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர். எனினும் அந்தக் கோரிக்கையினை ஏற்றுக்கொள்ளாத இரணைதீவு கிராம மக்கள் தமது கிராமத்தில் உள்ள கோயிலுக்கு அருகாமையில் தமது போராட்டத்தை மேற்கொண்டனர். குறித்த பிரச்சினை தொடர்பில் தீர்வு கிடைக்காத நிலையில் இரணைதீவு கிராமத்தில் தங்கி நின்று போராட்டங்களை முன்னெடுப்பதாக மக்கள் முடிவுகளை மேற்கொண்டனர். அதற்கு அமைவாக சுமார் 400 குடும்பங்கள் வரை இரணை தீவு கிராம மத்தில் தங்கியிருந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்