புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

புதன், ஏப்ரல் 18, 2018

சுமார் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய- 37 கிலோ நிறையுடைய கேரள

சுமார் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய- 37 கிலோ நிறையுடைய கேரள கஞ்சா பூநகரி பகுதியில் நேற்று இரவு கைப்பற்றப்பட்டது. சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பூநகரி பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய பூநகரி - சங்குப்பிட்டிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளத்துக்கு பழைய இரும்பு, பிளாஸ்ரிக் பொருட்கள் சேகரிக்கும் வாகனத்தின் மூலம் கடத்தப்பட்ட கஞ்சா கைப்பற்றப்பட்டது.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், சந்தேக நபர்களை கிளிநொச்சி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.