தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வெள்ளி, ஏப்ரல் 13, 2018

வவுனியாவில் நள்ளிரவில் விபத்து - 6 பயணிகள் காயம்!

வவுனியாவில் நள்ளிரவில் விபத்து - 6 பயணிகள் காயம்!


வவுனியாவில் இன்று அதிகாலை 12.15 மணியளவில் வேகக்கட்டுப்பாட்டையிழந்த தனியார் பேரூந்து விபத்துக்குள்ளானதில் கைக்குழந்தை உள்ளிட்ட ஆறு பயணிகள் காயமடைந்தனர்.
கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேரூந்து சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் சுற்று மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் பேரூந்தில் பயணித்த கைக்குழந்தை உட்பட ஆறு பேர் காயமடைந்தனர்.
வவுனியாவில் இன்று அதிகாலை 12.15 மணியளவில் வேகக்கட்டுப்பாட்டையிழந்த தனியார் பேரூந்து விபத்துக்குள்ளானதில் கைக்குழந்தை உள்ளிட்ட ஆறு பயணிகள் காயமடைந்தனர். கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேரூந்து சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் சுற்று மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் பேரூந்தில் பயணித்த கைக்குழந்தை உட்பட ஆறு பேர் காயமடைந்தனர்.

விபத்திற்குள்ளான தனியார் பேரூந்தின் சாரதி, நடத்துனர் தப்பியோட முற்பட்ட சமயத்தில் நடத்துனர் பொதுமக்களினால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக சம்பவத்தினை நேரில் பார்வையிட்ட பொதுமக்கள் தெரிவித்தனர். இவ் விபத்தில் பாடசாலையின் சுற்றுமதில் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.