புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

ஞாயிறு, ஏப்ரல் 22, 2018

அமெரிக்காவின் ஜீ.எஸ்.பி வரிச் சலுகை இன்று முதல் இலங்கைக்கு மீண்டும்

அமெரிக்காவின் ஜீ.எஸ்.பி வரிச் சலுகை இன்று முதல் இலங்கைக்கு மீண்டும் கிடைக்கவுள்ளது. இலங்கை உள்ளிட்ட 120 நாடுகளுக்கு அமெரிக்கா இந்த ஜீ.எஸ்.பி வரிச் சலுகைத்திட்டத்தை வழங்குகின்றது. எதிர்வரும் 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி வரையில் இந்த வரிச் சலுகைத் திட்டம் இலங்கைக்கு கிடைக்கும்.

இதன்படி, அமெரிக்காவிற்கு சுமார் 5000 பொருட்கள் வரிச் சலுகையின் அடிப்படையில் ஏற்றுமதி செய்ய இலங்கைக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இலங்கையிலிருந்து அதிகளவான பொருட்களை இறக்குமதி செய்யும் நாடாக அமெரிக்கா திகழ்கின்றது. கடந்த ஆண்டில் மூன்று பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை அமெரிக்காவுக்கு இலங்கை ஏற்றுமதி செய்துள்ளது.